Online jobs

Tamil Review

  பறக்கும் கல்லறை மனிதன்


நடிகர் : ஆருன் ஏகார்ட்
நடிகை : யுவானி 
                  ஸ்ட்ராகோவ்ஸ்கி
இயக்குனர் : ஸ்டூவார்ட் பீட்டி
இசை : ஜானி கிளிமெக்
ஓளிப்பதிவு : ரோஸ் எமிரி
படத்தின் கதை 1795-ல் இருந்து தொடங்குகிறது. விக்டர் என்ற விஞ்ஞானி இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஆய்வை செய்து வருகிறார். இந்த ஆய்வின் மூலம் 8 பிணங்களின் உறுப்புகளை கொண்டு ஒருவனை உருவாக்குகிறார். அவன் தான் கல்லறை மனிதன். இவனுக்கு உயிர் இருந்தும் ஆன்மா கிடையாது. அதனால் இவனுக்கு அழிவே கிடையாது.


இவனை உருவாக்கியதன் மூலம் பிற்காலத்தில் பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறார் விக்டர். இதனால் கல்லறை மனிதனை அழிக்க பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசுகிறார். ஆனால் கல்லறை மனிதன் அழியாமல், தன்னை அழிக்க நினைத்த விக்டரை பழி வாங்க திட்டம் தீட்டுகிறான். அதன் விளைவாக விக்டரின் மனைவியை கொன்று விட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பனி பிரதேசத்திற்கு போய்விடுகிறான்.
Add caption

இதை அறிந்த விக்டர், கல்லறை மனிதனை தேடி பனி பிரதேசத்திற்கு செல்கிறார். அங்கு பனியின் தாக்கத்தால் விக்டர் இறந்து விடுகிறார். தன்னை படைத்தவன் என்ற காரணத்தினால் கல்லறை மனிதன், விக்டரை அடக்கம் செய்கிறான். அப்போது அங்கு வரும் அரக்கர்கள், கல்லறை மனிதனை தாக்குகிறார்கள். அதில் ஒரு அரக்கனை இவன் கொன்று விடுகிறான். இதைப் பார்க்கும் அரக்கர்களின் எதிரியான கார்கோலிஸ் இனத்தை சேர்ந்தவர்கள் கல்லறை மனிதனையும், இவனை உருவாக்கிய குறிப்பு அடங்கிய டைரியையும் காப்பாற்றி, வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

மனிதனும் அல்லாத, அரக்கனும் அல்லாத, கார்கோலிஸும் அல்லாத கல்லறை மனிதனை கொன்றுவிடுமாறு தன் ராணியிடம் படைத்தளபதி கூறுகிறான். இதற்கு ராணி மறுப்பு தெரிவிக்கிறாள். மேலும் அவனிடம் ஏதோ மனித நேயம் இருக்கிறது. அதனால் இவனை நம்மிடமே வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறாள்.



நாங்கெல்லாம் அப்பவே அப்படி

நடிகர் : விஷ்ணு மஞ்சு
நடிகை : ஹன்சிகா மொத்வானி
இயக்குனர் : நாகேஸ்வர ரெட்டி
இசை : யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு :   எஸ்.ராதாகிருஷ்ணன்

 



  மதுரையில் ஜமீன்தாரான பிரபுவின் தங்கை சீதா 20 வருடத்துக்கு முன், முஸ்லீமான                                                        சும
னை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடையும் பிரபு, சுமனின் ஒரு காலை வெட்டி விடுகிறார். இதனால், பிரபுவை பழிவாங்க நினைக்கும் சுமன் தன் மனைவிக்கு சேரவேண்டிய சொத்தை தரும்படி பிரபு மீது வழக்கு தொடருகிறார்.

20 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் சுமன் வெற்றி பெறுகிறார். அதன்படி சீதாவுக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரபு அவரிடம் ஒப்படைக்கிறார். எப்படியாவது தன் அண்ணன் குடும்பமும், தன் குடும்பமும் ஒன்று சேர்ந்துவிடும் என்று எண்ணி வாழ்ந்து வந்த சீதாவுக்கு, இந்த வழக்கின் வெற்றி வேதனையைத் தருகிறது. 

சீதா தன்னுடைய மகனான விஷ்ணு மஞ்சுவிடம் இதுபற்றி சொல்லி வருத்தப்படுகிறார். தனது ஆசையே அண்ணன் குடும்பத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்றும் சொல்கிறார். இதனால் நாயகன் விஷ்ணு மஞ்சு, தன்னுடைய அம்மாவையும், மாமாவையும் சேர்த்து வைக்க களம் இறங்குகிறார்.

வழக்கு தோல்வியடைந்த வருத்தத்தில் இருக்கும் பிரபுவுக்கு வீட்டில் யாகம் வளர்த்தால் நன்மை கூடும் என்று அறிவுரை கூறுகின்றனர். அதற்கு ஏற்பாடு செய்யும்படி பிரபு தன்னுடைய மேனேஜரான பிரம்மானந்தத்திடம் கட்டளையிடுகிறார். இவரோ, முஸ்லீமான நாயகன் விஷ்ணு மஞ்சுவை தவறுதலாக புரோகிதர் என்று வீட்டுக்கு வரவழைக்கிறார். தனது மாமா வீட்டுக்குள் நுழைய இது ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணி, விஷ்ணு, பிரபுவின் வீட்டுக்குள் நுழைகிறார்.

அங்கு பிரபுவின் மகளான ஹன்சிகா, நாயகனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். இருந்தும் தன் காதலை நாயகனிடம் சொல்லாமல் இருந்து வருகிறார். ஹன்சிகாவுக்கு நாயகன் தனது முறைமாமன் என்று தெரியாமலேயே அவருடன் நெருங்கி பழகி வருகிறார்.

ஒருகட்டத்தில் புரோகிதரான விஷ்ணு மஞ்சுவை காதலிப்பதாகவும் அவனை எனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் எனவும் தனது தந்தை பிரபுவிடம் ஹன்சிகா கூறுகிறாள்.

இதைக்கேட்ட பிரபு ஹன்சிகா-விஷ்ணு மஞ்சு காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாரா? நாயகன் தனது தங்கை மகன் என்பதை அறிந்தாரா? தன் தாயின் ஆசையை நாயகன் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் விஷ்ணு மஞ்சு காதல், சண்டை, நகைச்சுவை, நடனம் என எல்லாவற்றையும் நிறைவாக செய்திருக்கிறார். ஹன்சிகா மொத்வானி தனது துறுதுறு நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகனை வலிய வலிய காதல் செய்யும் காட்சிகள் சிறப்பு. பிரபு, சுமன், சீதா, பிரம்மானந்தம் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

கிராமத்து பின்னணியில் ஒரு அழகான குடும்பக் கதையை படமாக்கிய இயக்குனர் நாகேஸ்வர ரெட்டியை பாராட்டலாம். திரைக்கதையில் பளிச்சிடுகிறார். படத்தை ஆரம்பம் முதல் கடைசிவரை தொய்வு இல்லாமல் கொண்டு போவது சிறப்பு.

தெலுங்கில் இருந்து டப்பிங் ஆகிய படம் என்பதால், சில கதாபாத்திரங்களின் வசனங்கள் உச்சரிப்பு புரியவில்லை. குறிப்பாக, பிரபுவுக்கு டப்பிங் பேசியவர், பிரபுவின் குரலை சீர்குலைத்திருக்கிறார்.

யுவன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். எஸ்.ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் கூடுதல் பலம். குறிப்பாக, பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘நாங்கெல்லாம் அப்பவே அப்படி’  குடும்ப சித்திரம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

300 பருத்தி வீரர்கள் - பாகம் 2

பதிவு செய்த நாள் : , மார்ச் 08, 6:13 PM IST

கநடிகர் : சுல்லிவான்
நடிகை : ஈவா கிரீன்
இயக்குனர் : நோம் முரோ
இசை : சைமன்
ஓளிப்பதிவு : டாம் கால்கேன்பார்க்


பெர்சியாவின் அரசனான கிங் டாரியஸுக்கு எப்படியாவது கிரேக்கத்தை தன்வசம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதற்காக கிரேக்கத்தின் எல்லையில் ஒரு கப்பல் தளத்தை தனது மகன் ஜெர்க்சீஸ் உடன் இணைந்து நிறுவுகிறான். இதை அறியும், கிரேக்க வீரனான தெமிஸ்டோகல்ஸ் இரவோடு இரவாக சென்று தனது படையுடன் அந்த கப்பல் தளத்தை அடித்து நொறுக்கி விடுகிறான். இறுதியில், ஜெர்க்சீஸும், கிங் டாரியஸும் படகில் தப்பித்து செல்லும்போது தெமிஸ்டோகல்ஸின் அம்புக்கு டாரியஸ் பலியாகிறார். தன்னுடைய அப்பா மரணத்துக்கு காரணமான கிரேக்கத்தை பழிவாங்க ஜெர்க்சீஸ் முடிவெடுக்கிறான்.

     பெர்சியாவின் கப்பல் படை தளபதியாக வரும் அர்தமெசியா கிரேக்க நாட்டை சேர்ந்தவள். கிரேக்கர்களால் சிறுவயதிலேயே வேசியாக்கப்பட்ட இவள் அவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு நடுரோட்டில் தூக்கியெறியப்படுகிறாள். பெர்சியா படைவீரன் ஒருவன் அவளை காப்பாற்றி பெர்சியாவுக்கு அழைத்துச் சென்று எல்லா கலைகளிலும் சிறந்த வீராங்கனையாக மாற்றி, பெர்சியாவின் படைப்பிரிவிலும் சேர்த்து விடுகிறான். பெர்சியாவுக்காக நிறைய அரசர்களின் தலைகளை கொன்றுக் குவித்த இவளுக்கு கிரேக்கர்கள் என்றாலே சுத்தமாக பிடிக்காது. இதனால், கிரேக்கத்துக்கு எதிராக கடல் வழியாகவும், தரை மார்க்கவும் போரை தொடுக்கும் ஜெர்க்சீஸின் கப்பல் படைக்கு இவள் தளபதியாக பொறுப்பேற்கிறாள்.

இந்த போரில் தெமிஸ்டோகல்ஸ் பெர்சியாவின் தாக்குதலை சமாளித்தாரா? கிரேக்கர்களை பழிவாங்க வேண்டும் என்ற ஜெர்க்சீஸ் மற்றும் அர்தமெசியாவின் ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.
ஆனால், இந்த போரில் பங்கெடுக்க கிரேக்கர்களில் சிலர் தயங்குகின்றனர். ஆனால், தன்னம்பிக்கை கொண்ட தெமிஸ்டோகல்ஸ் மட்டும் இந்த போரை எப்படியாவது சந்தித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுக்கிறான். அதன்படி, தன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான வீரர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு போரில் கலந்துகொள்ள செல்கிறான். கடல்வழி மார்க்கமாக தாக்குதலை தொடங்க ஆயத்தமாகும் தெமிஸ்டோகல்ஸ் வசம் சுமார் 100 படகுகளே உள்ளன. ஆனால், ஜெர்க்சீஸ் வசமோ ஆயிரத்துக்கும் மேல் படகுகள் உள்ளன.
Add caption


தெமிஸ்டோகல்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுல்லிவான் சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்துடன் நடித்துள்ளார். இவரது உடலமைப்பு பிரமிக்க வைக்கிறது. படைவீரன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கப்பல் படை தளபதியாக வரும் ஈவா கிரீன் தனது நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு அரசனின் தலையை வெட்டி, அந்த தலையின் உதட்டுக்கு இவர் முத்தம் கொடுப்பது ஹைலைட். தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஜெர்க்சீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ரொட்ரிகோ சாண்டோரோ தன் கதாபாத்திரத்தை மிகவும் நன்றாக செய்துள்ளார். திமிர்த்தனமான நடையில் அழுத்தம் காட்டுகிறார்.

இயக்குனர் நோம் முரோ இந்த படத்தின் முந்தைய பாகத்தைவிட இதில் நிறைய இரத்தத்தை தெளித்துள்ளார். முந்தைய பாகத்தில் தரைவழியாக போர் நடத்தி விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். இரண்டாம் பாகத்தில் கடல் வழியான தாக்குதலை மிகவும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி வெற்றியடைந்திருக்கிறார் இயக்குனர். சுல்லிவான் குதிரையுடன் கடலில் குதித்து மற்றொரு கப்பலில் ஏறிச் செல்லும் காட்சி இதுவரை எந்த சினிமாவிலும் பார்க்காதது.

சைமனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் காட்டுகிறது. போர்க்காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார். டாம் கால்கேன்பார்க்கின் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

மொத்தத்தில் ‘300 பருத்தி வீரர்கள்’ சிறப்பான விருந்து.

குறிப்பு: இப்படத்திற்கு யாரும் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்.

 

 

 

 

 

 

 

ஜெயம் ரவி நடிக்கும் நிமிர்ந்து நில் படத்தின் கதை இது தானாம்...!

Jayam Ravis Nimirnthu Nil Story
சமுத்திரகனி தற்போது இயக்கி வரும் படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம் ரவி, அமலா பால் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் முதன்முறையாக ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 24 வயது இளைஞன், 48 வயது நடுத்தர மனிதன் என இரண்டு வேடம் ஏற்கிறார். அமலா பால் சென்னையில் வேலை தேடும் நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடிக்கிறார். படத்தின் கதையை சமுத்திர கனி ரகசியமாக வைத்திருந்தாலும் கசிந்த கதை இதுதான்.

அநாதை சிறுவனான ஜெயம் ரவி ஆசிரமம் போன்ற ஒரு பள்ளியில் படிக்கிறார். நல்லதை மட்டுமே போதிக்கும் அந்தப் பள்ளியில், கல்லூரியில் படித்து முடித்து விட்டு 100 சதவிகிதம் நல்லவனாக வெளியே வருகிறார். பொய் சொல்வோ, தப்பு செய்யவோ அவருக்குத் தெரியாது. ஆனால் வெளி உலகம் இந்த இரண்டும் நிறைந்ததாக இருக்கிறது. அவரால் ஒரு நிமிடம்கூட நல்லவனாக வாழ முடியவில்லை. வாழ விடவில்லை சமூகம். இதனால் அவருக்கு பல துன்பங்கள் வந்து சேர்கிறது. மற்ற படத்தில் ஹீரோ வெகுண்டெழுந்து துன்பத்துக்கு காரணமானவர்களை போட்டு தள்ளிவிட்டு போய்கிட்டே இருப்பான். இதில் அப்படி இல்லை. ஹீரோ நல்லவனாகவே இருந்து நல்லதே செய்து மற்றவர்களை திருத்துவார். அது எப்படி என்பதுதான் திரைக்கதை. வன்முறை, சண்டை, ரத்தம் இல்லாத ஆக்ஷன் படமாக உருவாகிறது நிமிர்ந்து நில். சமுத்திரகனி நான்கு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய திரைக்கதையாம். இது அவரது கனவு படம்.




ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தின் கதை!

Jayam ravis Nimirnthu nil story
ஜெயம்ரவி - அமலாபால் இணைந்து நடிக்கும் புதிய படம் நிமிர்ந்து நில். போராளி படத்துக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக மேக்னா ராஜ் நடிக்கிறார். வாசன் விஷூவல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.

படத்தின் கதை குறித்து இயக்குனர் சமுத்திரகனி கூறுகையில் "ஒழுக்கம்தான் தனக்கு கற்பு மாதிரி என்று சொல்லி தலை நிமிர்ந்து வாழும் ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனின் கதை இது. தினமும் வீட்டை விட்டு கிளம்பும்போது, எதிர் கொள்ளும் பிரச்சினைகள்தான் இந்தப் படம். உன்னை நீ சரி செய்து கொள்... உலகம் தானாக சரியாகிவிடும் என்பது ஒன்லைன்," என்றார்.

ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஒரேநேரத்தில் தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் ஹீரோ நானி. ஹீரோயின்கள் மாற்றமில்லை என்பது கூடுதல் தகவலாகும்.












சினிமா  பக்கம் » விமர்சனம் » தெகிடி
                            தெகிடி
 



நடிகர் : அசோக் செல்வன்
நடிகை : ஜனனி ஐயர்
இயக்குனர் :ரமேஷ்
பட காட்சிகள்
சினி விழா



"அட்டகத்தி, "பீட்சா, "சூதுகவ்வும் உள்ளிட்ட வெற்றிபடங்களையும், வித்தியாச படங்களையும் தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் மற்றுமொரு வித்தியாச வெற்றித்தயாரிப்பு தான் ""தெகிடி

கதைப்படி, கதையின் நாயகர் வெற்றி எனும் அசோக் செல்வன், கிரிமினாலஜி படித்துவிட்டு உயிருக்கும், உடைமைக்கும், திறமைக்கும் சவால் விடும்படியான துப்பறியும் வேலை பார்க்க துடிப்புடன் சொந்த ஊரான தஞ்சாவூரில் காத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே சென்னையில் உள்ள ஒரு தனியார் டிடக்டீவ் ஏஜென்சியில் இருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. அப்பாவிடம் சொல்லிவிட்டு சென்னை கிளம்புகிறார்.



சென்னை சென்றடைந்ததும், தன்னை படிக்கும்போதே புத்திசாலியாக ஒப்புக்கொண்ட பேராசிரியரின் ஆசியை பெற்றுக்கொண்டு அந்த தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். வேலைக்கு சேர்ந்த உடனேயே சிலரது புகைப்படங்களும், அவர்களது முகவரியும் வெற்றியிடம் தரப்படுகிறது. அவர்களைப்பற்றிய ஏ "டூ இசட் டீடெயில்களை விசாரித்து துப்பறிந்து அந்த நிறுவனத்தில் நல்ல பெயர் எடுக்கிறார் வெற்றி. ஒரு சில அசைமென்ட்டுகளுக்கு அப்புறம் மது எனும் ஜனனி ஐயரின் புகைப்படத்தையும் அவரிடம் வழங்கும் அந்நிறுவனம், அவர் பற்றி தகவல்களையும் துப்பறிய சொல்கின்றனர்.



ஏற்கனவே ஒருமுறை வெற்றி, தன் துப்பறியும் பணிக்காக கமலக்கண்ணன் என்பவரது வீட்டை கள்ளத்தனமாக திறக்க முற்படும்போது வெற்றியை பார்த்துவிட்டு அவரை திருடனாக கருதுகிறார் மது அலைஸ் ஜனனி ஐயர். தன்னை பின் தொடரும் வெற்றி எனும் அசோக் செல்வனை பார்த்துவிட்டு சப்தம் போடுகிறார். வெற்றி அவரது வீட்டிற்கே போய் மது "அலைஸ் ஜனனியை சமாதானம் செய்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலருகிறது. ஒரு பக்கம் ஜனனி ஐயரைப்பற்றி தகவல்களை திரட்டிக்கொண்டே மற்றொரு பக்கம் அவருடன் லவ் டூயட் என்று காதலிலும் உலா வருகிறார் "வெற்றி அசோக் செல்வன்.



இந்நிலையில் வெற்றி தன் துப்பறியும் நிறுவனத்திற்காக தகவல் திரட்டி தந்தவர்கள் வரிசையாக விபத்தில் மரணமடையும் செய்திகளை பார்க்கும் இவர், அதிர்ச்சி அடைகிறார். அது பற்றி துப்பறிய கிளம்பும் வெற்றி,கண் முன்னே இன்னும் சில கொலைகளை விபத்தாக பார்க்கிறார். எல்லாமே தான் துப்பறிந்து தந்த மனிதர்கள் என்பதால் மேலும் திகிலடைகிறார் வெற்றி எனும் அசோக் செல்வன்!



தான் வேலை பார்த்த டிடெக்டீவ் ஏஜென்சி மீது சந்தேகம் கொண்டு அவர்களைத்தேடி ஆக்ரோஷத்துடன் புறப்படுகிறார். அவர்கள் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு "எஸ் ஆகி விடுகின்றனர். தன்னையும், தன்னால் துப்பறியப்பட்ட தன் காதலியையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் ஹீரோ, இச்சமயத்தில் கமலக்கண்ணன் இறப்பதற்கு முன் அவருடன் இறுதியாக செல்போனில் பேசிய காரணத்திற்காக அறை நண்பருடன் கைது செய்யப்படுகிறார். காதலி ஜனனிக்கு மொத்த உண்மையும் தெரிய வருகிறது. முதலில் கோபம் கொள்ளும் அம்மணி, ஒருவழியாக சமாதானமாகி வெற்றியின் பேராசிரியர் உதவியுடன் அசோக்கையும், அவரது நண்பனையும் ஜாமினில் எடுக்கின்றனர்.

லாக்கப்பில் இருந்து வெளியில் வரும் வெற்றி-அசோக், தனது இந்த நிலைக்கு காரணமானவர்களை, தன்னை கைது செய்த போலீஸ் ஜெ.பி. உதவியுடனும், அவரது உதவி இல்லாமலும் சட்டத்தின் முன் நிறுத்தவும், விபத்து என ஜோடிக்கப்பட்டு இத்தனை கொலைகளுக்கான நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முற்படுகிறார். அவர்களது நோக்கம் படம் பார்க்கும் நமக்கும் பகீர் என்றிருப்பது "தெகிடி படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி!



ஒருவழியாக ஹீரோ மோசமானவர்களில் முக்கியமானவர்களான அத்தனை பேரையும் திட்டமிட்டபடி சட்டத்தின்முன் நிறுத்தினரா.? தண்டனை தந்தாரா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், எதிர்பார்க்காத திருப்பங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸில் சொல்லப்பட்டிருக்கிறது. வாவ்! சூப்பர்!!

ஹீரோவாக வெற்றியாக அசோக் செல்வன், தமிழ்வாணன் நாவல்களில் படித்த துப்பறியும் சங்கர்லாலை நம் கண்முன் காட்சிக்கு காட்சிக்கு நிறுத்துகிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும், இவர் அறிமுகமான "வில்லா படத்தை காட்டிலு<ம் "நல்லா நடித்திருக்கிறார். "கீப்-இட்டு அசோக்!

மதுவாக ஜனனி ஐயர், சபாஷ் ஐயர் எனும்படி கண்களாலேயே அத்தனை பாவங்களையும் வெளிப்படுத்தி ரசிகனை சீட்டோடு கட்டிப்போடுகிறார். போலீஸ் ஆபிஸர் ஜெயப்பிரகாஷ், சைலேஷ் - ஜெயக்குமார்,நண்பர் நம்பியாக வரும் கலை, சாய் - கமலக்கண்ணன், பேராசிரியர் சடகோபன், மாதவன், சக்கரபாணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்து பலே சொல்ல வைத்திருக்கின்றனர்.

தினேஷ் கிருஷ்ணனின் இருட்டிலும் மிளிரும் ஒளிப்பதிவு, நிவாஸ் கே.பிரசன்னாவின் மிரட்டும் இசை, லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு, புதியவர் பி.ரமேஷின் இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகள் "அட்டகத்தி, "பீட்சா, "சூதுகவ்வும் வரிசையில் தெகிடியையும் தயாரிப்பாளர்களுக்கு வெற்றி படமாக்கியுள்ளதென்றால் மிகையல்ல!

ஆகமொத்தத்தில், ""தெகிடி - ""திகட்டலைடி!






மிரட்டுதடி!!














பிரம்மன்


நடிகர் : சசிகுமார்
நடிகை : லாவண்யா திருப்பதி
இயக்குனர் :சாக்ரடீஸ்



பட காட்சிகள்:
சசிக்குமார் அடிப்பவர், அழிப்பவர் (திரைப்படங்களில் தான்...) ஆயிற்றே அவர் கதாநாயகராக நடித்திருக்கும் திரைப்படத்திற்கு படைக்கும் கடவுள் "பிரம்மன் எனப்பெயர் சூட்டியிருக்கின்றனரே... எனும் யோசனையுடனேயே தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோமென்றால், தனது அருவாள், அடிதடி, லுங்கி, நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஜீன்ஸ், டான்ஸ், உடான்ஸ்... என்று சிட்டி பாயாக செம "கெட்-அப் பில் பளிச்சிடுகிறார் சசிக்குமார்!

சரி, விஷயம் இருக்கும் போல... என நிமர்ந்து சாய்ந்து உட்கார்ந்து ஸ்கிரினை பார்த்தோமென்றால்... அதில் கோயமுத்தூரில் 4-ம் கிளாஸ் படிக்கும்போது சசிக்குமாருக்கு ஒரு நண்பராம்... ஸ்கூல் வாத்தியார் பசங்களான அவரும், இவரும் அப்பவே ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு ஒரு தியேட்டரில் சினிமா பாடம்(!) படிப்பார்களாம்! அதனால் இவர்களது நட்பை பிரித்து சசியின் 4-ம் கிளாஸ் நண்பரின் அப்பா அஜெய் ரத்தினம் நண்பனை சென்னைக்கு அழைத்துப்போய் உனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டுமென்பதுதானே ஆசை! அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதுவரை நான் சொல்வதை கேட்டுபடி... நான் உன்னை சினிமா படிப்பை படிக்க வைக்கிறேன்... என்று தனியாக நண்பனை அழைத்துபோய் படிக்க வைக்கிறார்.

சசியின் தந்தை ஞானசம்பந்தனோ., சசிகுமாரை உருப்படாதவன், ஊதாரி, கவுதாரி என சொல்லி சொல்லியே அவரது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட, சசிக்குமாரோ தத்திக்குத்தி தாங்கள் சின்ன வயதில் படம் பார்த்த தியேட்டரையே லீசுக்கு எடுத்து ஓடாத படங்களையும், வேறு யாரும் போடாத பழைய படங்களையும் தன் தியேட்டரில் ஓட்டி காட்டி கையை சுட்டுக்கொள்கிறார். அவருக்கு உதவியாக சந்தானமும், சசியின் தியேட்டரில் டிக்கெட் கிழித்தப்படியும், இப்படியும் ஒரு கதையா.?! என கடுப்பாக, நாம் தியேட்டர் சீட்டை கிழிக்காதபடியும் ஆறுதல் அளிக்கிறார்!

இந்நிலையில் தியேட்டருக்கு வரியாக சுமார் 5 லட்சம் வரி செலுத்த வேண்டும்... இல்லையேல் தியேட்டரை இழுத்து மூட வேண்டும்... எனும் இக்கட்டான சூழ்நிலையில் பலரிடம் உதவி கோருகிறார் சசி. எல்லோரும் கைவிரித்த நிலையில், 4ம் கிளாஸ் படித்தபோது தன்னுடன் திரைப்பாடம் பயின்று இன்று ஆந்திராவில் நம்பர்-1 இயக்குநராக இருக்கும் மதன்குமாரைத்தேடி சென்னை போகிறார். நமக்கு திரைப்பாடம் நடத்திய தியேட்டர் இழுத்து மூடப்பட்டு, இடிக்கப்பட இருக்கிறது. அதற்கு உதவிசெய்ய... அதை காப்பாற்று எனும் கோரிக்கையை நண்பனுக்கு வைக்க சென்னை போகும் சசி, சினிமாவில் போராடும் அஸிஸ்டண்ட் இயக்குநர்கள் "பரோட்டா சூரி, சாம்ஸ் ஆகியோர் உதவியுடன் ஒருவழியாக மதன்குமாரின் அட்ரஸை தெரிந்து கொள்கிறார். ஆனால் தவறுதலாக அட்ரஸ் மாறி ஒருபடக் கம்பெனிக்கு போகும் சசி, தான் மதன்குமாரை தேடி வந்த கதையை திரைக்கதை போன்று பிரபல படத்தயாரிப்பாளர் ஜெயபிரகாஷிடம் சொல்ல, இதுவே சிறந்த கதை என இவர் மதன்குமாரை தேடி வந்தவர்... என்பது தெரியாமல் மதன்குமாரின் உதவியாளர் என எண்ணி சசிகுமாருக்கு 5 லட்சம் அட்வான்ஸ் தருகிறார்.

ஐய்யய்யோ., அப்புறம்? அப்புறமென்ன அந்த 5 லட்சம் செக்கை ஊருக்கு அனுப்பி வைக்கும் சசி, தியேட்டர் வரியை கட்ட சொல்லிவிட்டு பரோட்டா சூரியுடன் சினிமாவை கற்கிறார்.! "பவுண்டட் ஸ்கிரிப்டை தயார் செய்கிறார். இதற்கிடையில் இயக்குநர் மதன்குமாரையும் சந்திக்கும் சசிக்குமார் தான் இன்னார் என்று காட்டிக் கொள்ளாமல் அவரது அதி தீவிர ரசிகன் அதன் மூலமாகவே இப்பட வாய்ப்பை பெற்றேன் என்கிறார். இந்நிலையில் ஜெ.பி.க்கு உண்மை தெரிய வருகிறது. வாங்கிய அட்வான்ஸ்க்கு கதையை மட்டும் கொடுத்துவிட்டு நடையை கட்டு என்கிறார். முதலில் மறுக்கும் சசிக்குமார், தன் 4-ம் கிளாஸ் நண்பன் மதன்குமார் தான் இப்படத்தை இயக்க போகிறார் என்பது தெரிந்ததும், அவருக்காக விட்டுக்கொடுக்கிறார். (அவருக்கு இவர் தன் சிறு பிராயாத்து நண்பர் என்பது அப்பொழுதும் தெரிய மறுக்கிறது!)

அதற்காக மேலும் பெரிய தொகையை தயாரிப்பாளர் ஜெ.பி. கொடுக்க முன் வந்தும் அதையும் வாங்க மறுத்து, சூரி, சாம்ஸ் உள்ளிட்ட நண்பர்களையும் அம்போ என விட்டுவிட்டு ஊர் திரும்புகிறார் சசி. அங்கு சந்தானம் இவர் அனுப்பிய 5 லட்சத்தை இவரது தந்தை ஞானசம்பந்தத்திற்கு மருத்துவசெலவு செய்துவிட்டு "பலான படங்களை ஓட்டி தியேட்டரில் கல்லா கட்டி வருவது கண்டு கடுப்பாகும் சசிக்குமார், மீண்டும் தனக்கு பாடம் எடுத்த தியேட்டரை நல்ல தியேட்டராக்க களம் இறங்குகிறார்.

(தியேட்டரில் செம ரீல்... என்று கமெண்ட் தூள் பறக்கிறது...) அந்த நேரம் தியேட்டருக்குள் சசிக்குமாரின் காதலி தன் வருங்கால மனைவி எனும் உண்மை தெரிந்து உள்ளே நுழையும் மதன்குமார், ""நீ என்னை படைத்த பிரம்மன்(ஐ... படத்தோட டைட்டீல் என தியேட்டரில் மீண்டும் சவுண்டு...)னடா... நீ ஏன் சிவனேன்னு... இருந்துட்டே?! எனக்கேட்டபடி சசியின் காதலியை அவர் வசம் ஒப்படைக்கிறார் மதன்குமார். கதையையும், இயக்குநர் வாய்ப்பையும் கூட ஒப்படைப்பதாக, உறுதியளிப்பதாக ஞாபகம்! ஒருவழியாக படம் முடிகிறது!!

படம் முடிந்ததும் ஓடு ஓடு... என ஒரு பாட்டு இச்சமயத்தில் ரிப்பீட்டாகும் பாருங்க அது தியேட்டரை விட்டு ஓட சொல்வது மாதிரி என ரசனையோ.?! சாக்கரட்டீஸ்க்கும், சசிகுமாருக்குமே வெளிச்சம்!

சசிகுமார், மதன்குமார், கதாநாயகி லாவண்யா, ஜெயப்பிரகாஷ், ஞானசம்பந்தம், அஜெய் ரத்னம், வனிதா உள்ளிட்ட எல்லோரும் பிரமாதமாக நடித்திருக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் காட்டிலும் அந்த மார்டன் தியேட்டர் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து ஸ்கோர் செய்திருப்பது படத்தின் பெரும்பலம்!

தேவிஸ்ரீ பிரசாத்தின் இனிய இசை, ஜோமோள் டி.ஜான் மற்றும் பைசல் அலியின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளும் சிறப்பு!

புதியவர் சாக்ரடீஸின் இயக்கத்திலும், எழுத்திலும் இன்னும் கொஞ்சம் புதுமை இருந்திருக்கலாம்... எல்லாவற்றுக்கும் மேலாக சசிக்குமாருக்கும், சாக்ரடீஸ்க்கும் நட்பு ஓ.கே., 4--ம் வகுப்பு நட்பை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியுமா.?! எனும் எண்ணம் உதித்திருக்கலாம்! அவ்வாறு உதித்திருந்ததென்றால் நாமும், பிரம்மனும் தப்பித்திருக்கலாம்!

ஆகமொத்தத்தில், திரைக்கு வரும் முன் இன்னும் அழகாக படைக்கப்பட்டிருக்கலாம், செதுக்கப்பட்டிருக்கலாம் பிரம்மன்!


--------------------------------------------------------------


வெயில் பட ஹீரோ மாதிரி இந்தப்பட ஹீரோவும் சினிமா தியேட்டரில் தன் வாழ்க்கையை தேடுபவர் தான். அந்த சாயல் வராமல் இருக்க தாவணிக்கனவுகள் பின்பாதி சாயலை மிக்ஸ் பண்ணி எம்.சசிகுமாரின் பிராண்ட் நட்பு, காதல், தியாகம் எல்லாவற்றையும் சேர்த்தால் பிரம்மன் கதை ரெடி

ஹீரோ பழைய சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து ஓட்டிட்டு இருக்கார். தியேட்டர்ல கூட்டமே வர மாட்டேங்குது. புதுப்படம் தர மாட்டேங்கறாங்க, பழைய படத்துக்கு மக்கள் வர மாட்டேங்கறாங்க. 5 லட்சம் ரூபாய் கடன் ஆகிடுச்சு. சின்ன வயசுல சினிமாக்கனவோட இருந்த சக நண்பன் இப்போ சினிமாவுல புகழ் பெற்ற இயக்குநர்.அவரை சந்திச்சா உதவி கிடைக்கும்னு சென்னை கிளம்புறார்.

சென்னையில எதிர்பாராத விதமா ஹீரோவுக்கு, இயக்குநர் ஆகும் வாய்ப்பே கிடைச்சுடுது. அவரோட கதையை நண்பனுக்காக விட்டுத்தர்றார். காதலியையும் விட்டுத்தர தயார் ஆகறார். கடைசி வரை தான் யார்னு நண்பன் கிட்டே சொல்லவே இல்லை. உண்மை தெரிஞ்ச நண்பன் என்ன முடிவெடுக்கிறான் என்பதே கதை.

இதுவரை கிராமிய மனம் கமழும் படங்களிலேயே நடிச்சு வந்த எம்.சசிகுமார் முதன் முறையாக தைரியமாக நகர கதைக்கு மாறி இருக்கார். பெருசா மாற்றம் தெரியல. தங்கச்சி செண்ட்டிமெண்ட், அம்மா, அப்பாவிடம் பாசம் காட்டுவது அக்மார்க் எம்.ஜி.ஆர் பார்முலாக்கள் வழக்கம் போல் உண்டு. நண்பன் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு தியேட்டரில் கை தட்டல் அள்ளுது (இன்னும் எத்தனை நாளுக்கு இதை வெச்சே ஓட்டுவாரோ..?). டூயட் காட்சிகளில் ராஜூ சுந்தரத்தின் தயவில் யதார்த்தமான, கண்ணை உறுத்தாட நடன அசைவுகள். முதன் முறையா பாரீன் லொக்கேசன்ல ஆட்டம்.

ஹீரோயின் புதுமுகம் லாவண்யா த்ரிவேதி. இவர் 2006ல் மிஸ் உத்தர்காண்ட் ஆக தேர்வானவர். மாடலிங்க் துறையில் கொடி கட்டிப்பறந்தவர், சிக் ஷாம்புவின் மாடல். 2012 ல் தெலுங்குப்படத்தில் அறிமுகம் ஆனவர். இஷா கோபிகர் முக அழகு சாயல், தமன்னாவின் முக பாவனைகள் இரண்டையும் கலந்து கட்டி அடித்த நீள் வட்ட நிலா முகம் . பிரமாதமாக நடிக்கா விட்டாலும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பட்சி சொல்லுது (இந்த பட்சிக்கு வேலையே இருக்காதா? எப்போ பாரு எதையாவது சொல்லிட்டே இருக்குமா?) இவருக்கு கண்களும், உதடுகளும் சின்னதாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் நளினங்கள் தான்.

படத்துக்கு பலம் சேர்க்கும் சந்தானம் படத்தின் கதையோடு ஒன்றிய காமெடி செய்கிறார். மொத்தப்படத்திலும் 24 ஜோக்ஸ் தான் சொல்றார் என்றாலும் அப்ளாஸ் அள்ளுறார் .

சூரி, பின் பாதி கதையில் தான் வர்றார். வழக்கம் போல் ஓவராக மொக்கை போடாமல் சுமாராக மொக்கை போடுகிறார்.

எம் சசிகுமார்-ன் நண்பராக வரும் நான் ஈ புகழ் சுதீப் ஒரு கல்லூரியின் கதை ஆர்யா மாதிரி பாடி லேங்குவேஜில் அடக்கி வாசிக்கிறார்.

படத்தில் வசனம் செம ஷார்ப். பின் பாதி திரைக்கதையில் தான் தடுமாறி விட்டார்கள். செயற்கையான சம்பவங்கள், வலிந்து திணிக்கப்பட்ட நண்பன் செண்ட்டிமெண்ட், காதலியை விட்டுத்தரும் ஒட்டாத தியாகம் எடுபடவில்லை. ஆனாலும் சந்தானம் காமெடிக்காகவும், எம்.சசிகுமாருக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

சி.பி.கமெண்ட்: பிரம்மன் - நேர்த்தியான முன் பாதி, சந்தானம் காமெடி, செயற்கையான நம்ப முடியாத பின் பாதி, நச் வசனம்!


-----------------------------------------------------------------


சசிகுமார், சினிமா தியேட்டரை லீஸுக்கு வாங்கி நடத்த, போண்டி நிலையில் அது இருக்க, ஐந்து லட்சம் வரி கட்டச் சொல்லி அரசாங்கம் வேறு நோட்டீஸ் அனுப்ப, சின்ன வயதில் தன்னுடன் படித்த நண்பன், பெரிய இயக்குநராக இருப்பதால் அவனிடம் பணம் வாங்க சரி சென்னை செல்ல, இடம் மாறி இந்த சொந்தக் கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்ல, அவர் "அடுத்த படம் இதுதான், நீதான் டைரக்டர் என்று ஐந்து லட்சம் அட்வான்ஸ் கொடுக்க, அந்த நண்பன் இந்தக் கதையை எழுதி வாங்க, ஊரில் ஹீரோ காதலித்த பெண்ணையே நண்பன் மணக்கும் நிலை உருவாக, பிட் படம் ஓடும் அந்த தியேட்டரின் வரியை அரசாங்கம் தள்ளுபடி செய்ய... என்னங்க படிக்கும்போதே தலை சுற்றுகிறதா? உங்களுக்கே அப்படிஎன்றால் 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்?

நகரம், வெளிநாட்டு டூயட் என்று பாதை மாறியிருக்கிறார் சசிகுமார். "உனக்கெல்லாம் டான்ஸ் வராது என்று சந்தானம் கிண்டல் அடித்தாலும் நடனத்தில் மெருகு காட்டியிருக்கிறார். அப்புறம் எண்பத்தேழாவது தடவையாக, "நட்புதான் உலகத்தில் பெரியது என்று டயலாக் பேச, தியேட்டரில் நண்பர்கள் விஸில் அடிக்கிறார்கள்! இயக்கம் சாக்ரடீஸ்.

நாயகி லாவண்யாவுக்குக் கண்கள், வாய் என்று ஆரம்பித்து எல்லாமே சின்னச் சின்னதாக இருக்கின்றன!

"கிரிக்கெட்னா பால் போடறதும், தியேட்டர்னா கால் போடறதும் சகஜம்தான் பஞ்ச் டயலாக் அடிக்கிறார் சந்தானம்! பின் பாதியில் சூரி!

பாடல்கள் ஓகே! ஒரு பாட்டில் பத்மப்ரியா மனம் திறந்து செமை குத்து போடுகிறார்.

பிரம்மா - தலையெழுத்து!

.
இந்நிலையில் சசிக்குமாரின் தங்கை புருஷனின் தங்கையும், தன் காதலியுமான கதாநாயகி லாவண்யாவையும் இயக்குநர் மதன்குமாருக்கு நிச்சயம் செய்து விடுகின்றனர்! (என்ன ஒரு கோ இன்ஸிடண்ட்.?!) காதலியையும், நண்பனுக்காக விட்டுக் கொடுக்க துணியும் சசிக்குமார் விதியை நோகாதபடி (நாமாக இருந்தால் நொந்தபடி...) தியேட்டரில் நண்பனுடன் 4ம் கிளாசில் தான் பார்த்த ரீல்களை எல்லாம் ஓட்டி பார்க்கிறார்.

No comments:

Post a Comment