Online jobs

Wednesday, 16 April 2014

தமிழ் 3டியில் ரிலீசாகிறது அமேசிங் ஸ்பைடர்மேன் 2!

தமிழ் 3டியில் ரிலீசாகிறது அமேசிங் ஸ்பைடர்மேன் 2!

மார்ச் 31, 2014 | தமிழ் சினிமா

WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
440387-superheroes-the-amazing-spider-man-2-wallpaperஉலகம் முழுவதும் உள்ள குட்டீஸ் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அமேசிங் ஸ்பைடர் மேன் 2. கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கி உள்ள இந்தப் படத்தை இந்தியாவில் சோனி நிறுவனம் வெளியிடுகிறது.
முதல் பாகத்தில் ஸ்டைபர் மேன் பீட்சா கம்பெனியில் ஹோம் டெலிவரி பாயாக வேலை செய்தார். 2ம் பாகத்தில் யுனிவர்சிட்டியில் படிக்கிறார். ஸ்பைடர் மேனாக ஆண்ட்ரீவ் கேர்பில்டு நடித்திருக்கிறார்.
உடன் படிக்கும் மாணவியாகவும், காதலியாகவும் எம்மா ஸ்டோன் நடித்துள்ளார். 2ம் பாகத்தில் ஸ்பைடர் மேனின் வில்லன் நிஜமான பவர் ஸ்டார். ஆம் மின்சாரத்தை உறிஞ்சிக் குடித்து மின்சாரத்தை வெளியிட்டு மக்களை அழிப்பவன். ஒரு சிட்டிக்கு தேவையான மின்சாரம்தான் வில்லனின் ஒருவேளை உணவு என்றால் பவரை பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படிப்பட்ட வில்லனை ஸ்டைபர் மேன் எப்படி அழிக்கிறார் என்பதுதான் கதை. வில்லனாக நடித்திருக்கிறவர் ஜெம்மி பாக்ஸ். ஹன்ஸ் சிம்மர் இசை அமைத்துள்ளார். டேனியல் மிண்டல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மார்க் வெப் இயக்கி உள்ளார்.
படத்தில் இதுவரை இல்லாத நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3டி, ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழியிலும் வருகிற மே 1ந் தேதி ரிலீசாகிறது. குட்டீசுக்கு ஒரு கோடை விருந்து ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment