Online jobs

Saturday, 19 April 2014

முதன்முறையாக சொந்த குரலில் பேசும் அனுஷ்கா

முதன்முறையாக சொந்த குரலில் பேசும் அனுஷ்கா
 
முதன்முறையாக சொந்த குரலில் பேசும் அனுஷ்கா
வீரம் படத்தை தொடர்ந்து அஜீத், கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

தற்போது சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அஜீத், அனுஷ்கா நடிக்கும் காட்சிகளை கவுதம் மேனன் படமாக்கி வருகிறார். அஜீத்துடன் அனுஷ்கா நடிப்பது இதுவே முதல் முறை. அதேபோல் முதன் முறையாக இப்படத்தில் சொந்தக்குரலில் பேசுகிறார். இதுவரை அனுஷ்காவுக்கு டப்பிங் கலைஞர்களே தமிழில் குரல் கொடுத்து வந்தனர். முதல் தடவையாக இம்முயற்சியை அவர் மேற்கொள்கிறார். இதற்காக தமிழ் கற்க துவங்கியுள்ளார் அனுஷ்கா.

இப்படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment