சூர்யா-வெங்கட்பிரபு இணையும் புதிய பட பூஜை
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 15, 1:32 PM IST
சிங்கம்-2 படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான்’ படத்தில் நடிக்க வருகிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆகஸ்டு மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இப்படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இதன் படபூஜை தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று நடந்தது. இதில் சூர்யா, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் இதனை தயாரிக்கிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்துக்கு கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. அதற்கான தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்கவுள்ளனர். காதல், ஆக்ஷன், திரில்லர் படமாக இது தயாராகிறது.

No comments:
Post a Comment