Online jobs

Saturday, 26 April 2014

கோச்சடையான் படத்தை மோடி பார்க்கிறார்

கோச்சடையான் படத்தை மோடி பார்க்கிறார்
 
கோச்சடையான் படத்தை மோடி பார்க்கிறார்
கோச்சடையான் படத்தை நரேந்திரமோடி பார்க்கிறார். குஜராத்தில் இதற்கான சிறப்பு காட்சிக்கு ரஜினி ஏற்பாடு செய்துள்ளார். ரஜினிக்கு நரேந்திர மோடிக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது மோடி நேரில் போய் நலம் விசாரித்தார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த போதும் ரஜினியை அவரது வீட்டில் போய் நேரில் சந்தித்தார். 

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் மோடி வெற்றி பெற ரஜினி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கோச்சடையான் படத்தை பார்க்க நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குஜராத்தில் மோடி பார்ப்பதற்காக சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

இது போல் இந்தி நடிகர், நடிகைகள் பார்ப்பதற்காகவும் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. கோச்சடையான் படம் வருகிற 9–ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. 3500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வருகிறது. இதில் ரஜினி தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். 

நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களான அவதார், டின்டின் படங்கள் போன்று அனிமேஷன் படமாக இது தயாராகியுள்ளது. இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைய்லரை சமீபத்தில் வெளியிட்டனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. 

படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். கோச்சடையான் ரிலீசாகும் நாளில் தியேட்டர்களில் கட்–அவுட்கள், கொடி தோரணங்கள் அமைத்து விழா போல் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

ராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடி நகைகள்

ராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடி நகைகள்
 
ராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடி நகைகள்
அனுஷ்கா ருத்ரமாதேவி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். தமிழிலும் இப்படம் வருகிறது.
இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டை கற்றுள்ளார். குதிரையேற்றம் பயிற்சியும் எடுத்துள்ளார்.
ராணி கேரக்டர் என்பதால் அனுஷ்காவுக்கு பிரத்யேகமாக தங்கத்தில் நகைகள் வடிவமைக்கப்பட்டது. ரூ.5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன. இவற்றை அணிந்து அனுஷ்கா நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அனுஷ்காவுடன் ராணா, கிருஷ்ணம் ராஜூ, பாபாசேகர், கேத்ரினா திரேஷா, ஹம்சநந்தினி போன்றோரும் நடிக்கின்றனர். குணசேகர் இயக்குகிறார்.
அனுஷ்கா ஏற்கனவே அருந்ததி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ருத்ரமாதேவி படமும் அனுஷ்கா திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்கின்றனர். அரண்மனை அரங்குகள் அமைத்து அதிக பொருட்செலவில் இப்படத்தை எடுக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.

ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?

ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?
 
ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?
ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்துள்ளது. சமீபத்தில் இவர்கள் தங்கள் திருமண நாளை கொண்டாடினார்கள். 

ஐஸ்வர்யாராய்க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டனர். குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை. 

மீண்டும் நடிக்கும்படி கேட்டு நிறைய இயக்குனர்கள் கதைகளுடன் அணுகினர். எதையும் ஏற்காமல் இருந்தார். மணிரத்னம் தெலுங்கு, தமிழில் எடுக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். 

இந்த நிலையில்தான் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் பாராளுமன்ற தேர்தலுக்காக ஓட்டு போட வந்தனர். அப்போது ஐஸ்வர்யாராய் வயிறு பெரியதாக இருந்தது. எடையும் கூடியிருந்தது. இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Friday, 25 April 2014

என்னமோ ஏதோ

என்னமோ ஏதோ
 


நடிகர் : கௌதம் கார்த்திக்
நடிகை :ராகுல் ப்ரீத் சிங், நிகிஷா படேல்
இயக்குனர் :ரவி தியாகராஜன்
இசை :டி.இமான்
ஓளிப்பதிவு :கோபி ஜெகதீஸ்வரன்
படத்தின் ஆரம்பத்தில் சாலையோரம் நிற்கும் நாயகனான கௌதம் கார்த்திக்கை அடித்து கடத்திச் செல்கிறார் பிரபு. கடத்தி செல்லும் போது வழியில் கௌதமிடம் உன்னைப் பற்றி சொல் என்று கேட்கிறார் பிரபு. அதிலிருந்து படம் பிளாஸ்பேக்கில் நகருகிறது.

சென்னையில் வசதியான குடும்பத்தில் பிறந்து தாயுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கௌதம் கார்த்திக். சிம்ரன் என்னும் பெண்ணை காதலித்து அந்த காதல் கைகூடாமல் போகிறது. அந்தப் பெண்ணுக்கு ஐதராபாத்தில் டாக்டர் ஒருவருடன் திருமணம் நடக்கிறது. அத்திருமணத்திற்கு செல்லும் கௌதம், காதல் தோல்வியால் மது அருந்திவிட்டு சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். இதேபோல் மணமகன் டாக்டரால் காதல் தோல்வியடைந்த ராகுல் ப்ரீத் அதே திருமணத்திற்கு வருகிறார். இருவரும் சந்தித்து ஆட்டம் ஆடி நண்பர்களாகின்றனர்.

அதன்பிறகு இருவரும் சென்னையில் சந்திக்கிறார்கள். பிறகு நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார்கள். கௌதமிற்கு, ராகுல் ப்ரீத் மீது காதல் ஏற்படுகிறது. தன் காதலை சொல்ல முயற்சி செய்யும் போது, ராகுல் ப்ரீத் ஒருவரை அறிமுகம் செய்து வைத்து இவரை திருமணம் செய்யப்போவதாக கூறுகிறார். இதனால் மனவேதனை அடைகிறார் கௌதம். அதன் பிறகு நிகிஷா படேலின் நட்பு கௌதமிற்கு கிடைக்கிறது. இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். 

இதற்கிடையில் ராகுல் ப்ரீத் திருமணம் செய்யபவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கௌதம் மீது காதல் வயப்பட்டு அவரை தேடி வருகிறார். இறுதியில் கௌதம் யாருடன் ஜோடி சேர்ந்தார்? எதற்காக பிரபு கடத்தினார்? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனான கௌதம் கார்த்திக், துறுதுறு நடிப்பில் படம் முழுக்க சாக்லேட் பாயாக வலம் வருகிறார். இவருடைய நடிப்பு அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. காதல் மற்றும் நடன காட்சிகள் என அனைத்திலும் திறமையாக நடித்து அசத்தியிருக்கிறார்.

நாயகிகள் ராகுல் ப்ரீத், நிகிஷா படேல் இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அழகம் பெருமாள், மதன்பாப், அனுபமா குமார், பிரபு ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘ஷட் அப் யுவர் மவுத்...', 'நீ என்ன பெரிய அப்பா டக்கரா...' பாடல் தாளம் போட வைக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ள இயக்குனர் ரவி தியாகராஜன், படத்தை காமெடியாக சொல்ல முயற்சி செய்து அதில் பின்னடைவு அடைந்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கிலாம்.

மொத்தத்தில் ‘என்னமோ ஏதோ’ எதிர்பார்ப்பு குறைவு.

வாயை மூடி பேசவும்

வாயை மூடி பேசவும்
 
நடிகர் : துல்கர் சல்மான்
நடிகை :நஸ்ரியா நசிம்
இயக்குனர் :பாலாஜி மோகன்
இசை :சியன் ரால்டன்
ஓளிப்பதிவு :சௌந்தர் ராஜன்
மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் துல்கர் சல்மான். இவர் வீடுவீடாக சென்று கம் விற்கும் தொழிலை செய்து வருகிறார். சிறந்த பேச்சு திறன் கொண்ட இவர் ரேடியோவில் தொகுப்பாளராக வேண்டும் என்பதே இவரின் இலட்சியம்.

இந்நிலையில் இந்த ஊரில் வித்தியாசமான நோய் ஒன்று பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டால் பேச்சு வராமல் போய்விடுகிறது. இதனை அறிந்து சுகாதாரத்துறை அமைச்சரான பாண்டியராஜன், அங்குள்ள பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடியாத இவர், தனக்கும் அந்த நோய் தாக்கப்பட்டதாக கூறி வாய்ப்பேச முடியாமல் நடிக்கிறார். 

அந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் நாயகி நஸ்ரியாவிடம், தனக்கு அந்த நோயின் அறிகுறி இருப்பதாக கருதி சோதனை செய்ய சொல்கிறார் நாயகன் துல்கர் சல்மான். இதன் காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு வரும் துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் பழக்கம் ஏற்படுகிறது. 

நஸ்ரியாவிற்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்ய வீட்டில் உள்ளோர்கள் முடிவு செய்கிறார்கள். அந்த உறவினர் நஸ்ரியாவிற்கு நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இதைப் பிடிக்காத நஸ்ரியா அவர் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்துவருகிறார். இதற்கிடையில் அந்த ஊரில் அதிகமாக எல்லோரும் பேசுவதால்தான் நோய் அதிகமாக பரவுவதாக அரசு முடிவு செய்கிறது. இதனால் ஊரில் யாரும் பேசக் கூடாது என்று அரசு உத்தரவு போடுகிறது. அப்படி பேசுபவர்கள் இறக்க நேரிடும் என்றும் கூறுகிறது. இதனால் அனைவரும் பேசுவதை தவிர்த்து செய்கையால் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் நஸ்ரியாவிற்கு உறவினர் பிடிக்காமல் போக, துல்கர் சல்மான் மீது காதல் ஏற்படுகிறது. துல்கருக்கும் நஸ்ரியா மீது காதல் ஏற்படுகிறது. எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசும் துல்கர், நஸ்ரியாவின் மீது உள்ள காதலை சொல்லாமல் தயக்கம் காட்டி வருகிறார். நஸ்ரியாவும் துல்கர் மீது உள்ள காதலை வெளிகாட்ட முடியாமல் தயங்கி வருகிறார். இந்நிலையில் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து ஊரில் பேசக் கூடாது என்ற தடை உத்தரவு நீக்கப்படுகிறது.

தடை நீக்கப்பட்டப் பிறகு இருவரும் தன் மனதில் உள்ள காதலை பகிர்ந்துக் கொண்டார்களா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன் துல்கர் சல்மான், தனது முதல் தமிழ்ப்படத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சொந்தக்குரலில் தமிழில் பேசி நடித்திருப்பது மேலும் சிறப்பு. துறுதுறு இளைஞனாக படம் முழுக்க சிறப்பாக வலம் வருகிறார்.

மருத்துவராக வரும் நாயகி நஸ்ரியாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவு. பெரும்பாலான காட்சிகளில் சோக முகத்துடனே வருகிறார். படத்தில் துறுதுறு நஸ்ரியாவை பார்க்க முடியாதது மிகுந்த ஏமாற்றம். பொருந்தாத கதாபாத்திரம் என்றே எண்ணத்தோன்றுகிறது. அமைச்சராக வரும் பாண்டியராஜன் நகைச்சுவையான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு திரையில் வந்திருக்கும் மதுபாலா, கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். 

சியன் ரால்டனின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பிற்பாதியில் வசனங்களே இல்லை என்பதை மறக்க வைத்து இவருடைய இசையாலயே படத்தை நகர்த்தி செல்கிறார். காட்சிகளுக்கு ஏற்றார் போல் இசையமைத்து ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

வித்தியாசமான கதைக்கருவைக் கொண்டு களம் இறங்கியுள்ள இயக்குனர் பாலாஜி மோகன், எந்த பிரச்சனைகளையும் பேசி முடித்துவிடலாம் என்ற நாயகன், எதையுமே வெளிப்படையாக பேசமுடியாத நாயகி, பேசவே தெரியாத அமைச்சர், சினிமா நடிகரை எதிர்த்துப் போராடும் குடியாரர்கள் சங்கம், நடிகருக்கு ஆதவாக ரசிகர்கள், தன் கணவரிடமே கருத்தை பகிர்ந்துக் கொள்ளாத மனைவி மதுபாலா, என அனைவரிடமும் கதையை பிரித்துக் கொடுத்து அதை அழகான திரைக்கதையை அமைத்திருக்கிறார். குறிப்பாக குடிகாரர்கள் சங்கம் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கம் படியாக இருக்கிறது. 

மொத்தத்தில் ‘வாயை மூடி பேசவும்’ மௌனமான வெற்றி.