தங்கமீன்களுக்கு 3 தேசிய விருதுகள் – மறைந்த பாலுமகேந்திராவின் தலைமுறைகள், வல்லினம் படத்திற்கும் தேசிய விருது!
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தங்கமீன்களுக்கு 3 தேசிய விருது
கற்றது தமிழ் படத்திற்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த படம் தங்கமீன்கள். அப்பாவுக்கும் – மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை மையப்படுத்தி தங்கமீன்கள் படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை ராமே இயக்கி, முதன்முறையாக ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.
ராமின் மகளாக சாதனா என்ற குழந்தை நடித்து இருந்தார். இயக்குநர் கவுதம் மேனன் இப்படத்தை தயாரித்து இருந்தார். தங்கமீன்கள் படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை öபற்றது.
சமீபத்தில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில், திரையிடப்பட்ட ஒரே தமிழ்படமும் தங்கமீன்கள் தான். இதுதவிர பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு விருதுகளை öபற்றுள்ளது.
இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட 61வது தேசிய விருது பட்டியலில் ராமின், தங்க மீன்கள் படமும் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சிறந்த குழந்தை நட்சத்திரமாக இப்படத்தில் நடித்த சாதனாவுக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது, ஆனந்த யாழை… பாடலுக்காக நா.முத்துகுமாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்திற்கு விருது
சமீபத்தில் மறைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா, இயக்கத்தில் வெளிவந்து அனைத்து தரப்பினரின் பாரட்டை பெற்ற தலைமுறைகள் படத்திற்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த ஒருமைப்பாட்டுக்கான விருதுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது. பாலுமகேந்திரா இயக்கி, ஒளிப்பதிவு செய்ததுடன் முதன்முறையாக (அதுவே கடைசியும் கூட…) அவரது நடிப்பில் வெளிவந்த படம் தலைமுறைகள்.
தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையேயான பாசத்துடன், நமது தமிழ் மண்ணின் கலாச்சாரம், பண்பு இவை எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்தது இந்த தலைமுறைகள். இப்படத்தை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமார் தயாரித்ததுடன் கெஸ்ட் ரோலில் ஒரு காட்சியிலும் நடித்து இருந்தார்.
வல்லினம் படத்திற்கும் தேசிய விருது
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஈரம் அறிவழகன் இயக்கத்தில், நகுல், மிருதுளா, அதுல் குல்கர்னி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படம் தான் வல்லினம். கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருது, இப்படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய சபு ஜோசப்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி தவிர பிற மாநில படங்கள் மற்றும் கலைஞர்கள் பெற்ற தேசிய விருதுகள் விபரம்…
* சிறந்த நடிகர்
இந்தாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகித் என்ற இந்தி படத்தில் நடித்த ராஜ்குமார் ராவுக்கும், பெராரியாத்தவார் என்ற மலையாள படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சார்மூடுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* சிறந்த நடிகை – கீதாஞ்சாலி தபா (லியார்ஸ் டைஸ் – இந்தி)
* சிறந்த படம் – ஷிப் ஆப் தீசஸ் (இந்தி)
* சிறந்த பொழுதுபோக்கு படம் – பாக் மில்கா பாக் (இந்தி)
* சிறந்த குழந்தைகள் படம் – கப்கால்
* சிறந்த இயக்குநர் – ஹன்சால் மேத்தா (படம் – ஷாகித் – இந்தி)
* சிறந்த துணை நடிகர் – சவுரப் சுக்லா (ஜாலி எல்எல்பி – இந்தி)
* சிறந்த துணை நடிகை – இரண்டு பேர் öபறுகின்றனர். அமிர்தா (அஸ்து – மராத்தி), அயிடா எல்காசெப் (ஷிப் ஆப் தீசஸ் – இந்தி)
* சிறந்த பின்னணி பாடகர் – ருபன்கார் பக்சி (ஜெயிதீஸ்வர் – பெங்காலி)
* சிறந்த பின்னணி பாடகி – பெல்லா ஷெண்டே (துயா தர்மா கொன்சா – மராத்தி)
* சிறந்த இசை (பாடல்கள்) – கபீர் சுமன் (ஜத்தீஸ்வர் – பெங்காலி)
* சிறந்த பின்னணி இசை – சாந்தனு மொய்திரா (நான் பங்காரு தல்லி – தெலுங்கு)
* சிறந்த ஸ்பெல் எபெக்ட்ஸ் – ஜல் (இந்தி)
* சிறந்த நடனம் – கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் – இந்தி)
No comments:
Post a Comment