Online jobs

Wednesday, 26 March 2014

கேரள நாட்டிளம் பெண்களுடனே செக்ஸ் படமா?: டைரக்டர் குமரன் ஆவேசம்

கேரள நாட்டிளம் பெண்களுடனே செக்ஸ் படமா?: டைரக்டர் குமரன் ஆவேசம்

 
கேரள நாட்டிளம் பெண்களுடனே செக்ஸ் படமா?: டைரக்டர் குமரன் ஆவேசம்
‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ செக்ஸ் படம் என்று சிலர் வதந்தி பரப்புவதாக அப்படத்தின் டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் ஆவேசப்பட்டார். இந்த படம் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்ற தலைப்பை பார்த்த சிலர் இது ஆபாச படம் என இணையதளங்களில் செய்தி பரப்பி உள்ளனர். இதுகுறித்து டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– 

‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ குடும்பபாங்கான காமெடி படம். பெண்களும் குழந்தைகளும் படத்தை பார்த்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். ஆனால் இந்த தலைப்பை பார்த்து ஏதோ நான் ஆபாச படத்தை எடுத்து வெளியிட்டு இருப்பதாக சிலர் புரளி கிளப்பி விட்டுள்ளனர். 

‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்பது பாரதியார் பாடலில் உள்ள வரி. அதை ஆபாசமாக திரித்து சொல்வது கண்டிக்கத்தக்கது. மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க ஒரு கும்பல் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறது. இது அதுமாதிரி படம் இல்லை. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டி யு சான்றிதழ் வழங்கி உள்ளனர். 

இந்த படத்தை சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் திரையிட மறுத்தனர். தலைப்பு ஆபாசமாக உள்ளது என்று அந்த தியேட்டரின் மானேஜர் கூறினார். இந்த படத்தில் பாடல்கள் எழுதி உள்ள கவிஞர் வைரமுத்து மானேஜருக்கு போன் செய்து அது நல்ல படம். உங்க தியேட்டருக்கு இழுக்கு வராது என்று உறுதி அளித்த பிறகு படத்தை திரையிட சம்மதித்தனர். 

கமர்ஷியல் ஆன நல்ல பொழுதுபோக்கு படம் என்று விநியோகஸ்தர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் சிலர் திட்டமிட்டு படத்துக்கு எதிராக வதந்தி பரப்புகின்றனர். இதையும் மீறி படம் ஹிட்டாகும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment