சினிமாவே பிடிக்கவில்லை - சிம்பு விரக்தி
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிம்பு, தனக்கு சினிமாவில் நடிக்க பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன், அதனால் சினிமாவில் எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். நல்லது, கெட்டது எது என்று உடனே கூறிவிடுவேன். சின்ன வயது முதலே, ரஜினி சார் மாதிரி சூப்பர் ஸ்டாராக ஆக வேண்டும் என்பது தான் எனது கனவாக இருந்தது. ஆனால் வயது உயர உயர வாழ்க்கை, வேறு மாதிரி சென்று விடுகிறது. தற்போது சினிமாவே எனக்கு பிடிக்கவில்லை. சினிமா எனும் வட்டத்திற்குள் சிக்கி விடாமல், சினிமாவை தாண்டி வேறு ஏதாவது செய்யலாமா என்று எண்ண தோன்றுகிறது. எனக்குள் இருந்த சூப்பர் ஸ்டார் ஆகும் எண்ணமும் போய்விட்டது. மேலும் சினிமா மட்டுமின்றி பணத்தை கண்டாலும் பிடிக்கவில்லை. பணம், ஒருவனை நல்லவனாகவும் ஆக்குகிறது, கெட்டவனாகவும் மாற்றுகிறது, பொறாமையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.
சிம்பு இப்படி விரக்தியாக என்ன காரணமோ...?!!
No comments:
Post a Comment