Online jobs

Friday, 14 March 2014

கோச்சடையான் ஏப்ரல் 11ல் ரிலீஸ்

ரஜினியின் கோச்சடையான் ஏப்ரல் 11ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Rajnikanths Kochadaiiyaan to be released worldwide on Apr 11
ரஜினி நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி, நாசர், ஆதி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ரஜினி, அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரஜினி உடல்நலம் சரியில்லாமல் போய் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த பிறகு நடித்துள்ள படம் இது. முதன்முறையாக ரஜினி 3டி அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்டசரிங் தொழில்நுட்பம் கோச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகிறது. இதனை படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது. 

No comments:

Post a Comment